டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி!விஏஓ-க்களுக்கு மாதம் ரூ.1,000 பராமரிப்புப் படி: தமிழக அரசுகாத்திருப்போா் பட்டியலில் உள்ள ஆசிரியா்களுக்கு பணி வாய்ப்புஇஸ்ரேலில் எதிா்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்பு: அதிபா் நாளை முடிவுபுதிய காசோலை விதிகள்: 2027 ஜனவரி 1 முதல் அமல்1.5 டிரில்லியன் டாலா் இலக்கை எட்ட முதலீட்டு ஊக்குவிக்க ஆணையம்: தமிழக அரசு அமைத்தது

7.11.1976: இந்தியாவின் 2-வது செயற்கைக் கோள்: 1978-ல் தயாராகிவிடும்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

7.11.1976 - Dinamani

Updated On :

பெங்களூர், நவ. 6 - இந்தியாவின் இரண்டாவது செயற்கை கோள் வானில் பறக்கவிடப்படுவதற்கு 1978 மத்தியில் தயாராகிவிடும். அந்த ஆண்டு பிற்பகுதியில் அது ரஷிய வானவெளி நிலையத்திலிருந்து வானில் செலுத்தப்படும் என்று இந்திய விஞ்ஞான செயற்கை கோள் திட்டத்தின் டைரக்டரான பேராசிரியர் யு.ஆர். ராவ் தெரிவித்தார்.

பெங்களூர், நிருபர்கள் கழகத்தில் அவர் பேசினார். இரண்டாவது செயற்கைகோள் முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்படுவதாக அவர் சொன்னார். அதை தயாரிக்கும் வேலை பாதி முடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செயற்கைகோளின் யந்திர மாடல் இப்போது தேசிய வானியல் சோதனை கூடத்தில் சோதிக்கப்பட்டு வருவதாகவும் மின்சார மாடல் சம்பந்தப்பட்ட வேலையும் மேற்கொள்ளப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.

அடுத்து இச்செயற்கைக் கோளின் மூல முன் மாதிரி தயாரிக்கப்படும். வானில் செலுத்தப்படும் செயற்கை கோள் 1978 மத்தியில் தயாராகி அந்த ஆண்டு பிற்பகுதியில் வானில் செலுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.

“பூமியில் 300 கிலோ மீட்டர் நீளமும், 300 கிலோ மீட்டர் அகலமும் உள்ள பிராந்தியங்களைப் புகைப்படங்களாகப் பிடிப்பதற்கான வசதிகள் இரண்டாவது செயற்கைக் கோளில் இருக்கும்.

இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட முதலாவது செயற்கைக் கோளான “ஆர்யபட்டா” தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கிறதா என்ற கேள்விக்கு பேராசிரியர் ராவ் பதிலளிக்கையில், ஆர்டபட்டா செயற்கைக் கோளானது நமது தொழில் நுட்பத் திறமையில் நமக்கு முழு நம்பிக்கையை அளித்துள்ளது என்றும் அத்துடன் இரண்டாவது செயற்கைக்கோளைத் தயாரிப்பதற்கான தகவல்களை அளித்துள்ளது என்றும் கூறினார்.

ஆர்யபட்டா நன்கு செயல்பட்டு வருகிறது. தரை நிலையத்திலிருந்து அனுப்பப்படும் உத்தரவுகளுக்கு ஏற்ப தகவல்களை அனுப்பி வருகிறது. அது சுமார் 10 ஆண்டுகளுக்கு வானில் இருக்கும். இது அதனிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதற்கு மேலாகும் என்று பேராசிரியர் ராவ் சொன்னார்.

Summary

7.11.1976: India's 2nd satellite: To be ready in 1978

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.