6.11.1976: லோக சபை ஆயுள் நீட்டிப்பு மசோதா அங்கீகாரம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

6.11.1976 - Dinamani
புது டில்லி, நவ. 5 - லோக சபையின் ஆயுட் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீடிக்க இன்று அந்த சபை முடிவு செய்தது. அதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 180 வாக்குகளும், எதிர்த்து 34 வாக்குகளும் கிடைத்தன.
வயது வந்தோர் வாக்குரிமை மூலம் தேர்தல் நடத்துவதிலும், பார்லிமெண்டரி ஜனநாயக முறையிலும் ஆளும் கட்சியின் பற்றுதலை சட்ட மந்திரி கோகலே மீண்டும் வலியுறுத்தி மசோதாவை பலமாக ஆதரித்துப் பேசினார்.
தேர்தல்களை முற்றிலும் கைவிடுவது அரசின் எண்ணமல்ல என்று அவர் கூறினார். நிலைமை ஸ்திரப்பட்டால் எதிர்பார்ப்பதை விட விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என்றார் அவர்.
மற்றொரு ஆண்டுக்கு தேர்தலை நடத்த முடியாது என்பது இந்த மசோதா நிறைவேற்றத்தின் பொருள் அல்ல. எப்பொழுது வேண்டுமானாலும் லோகசபையை கலைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. குறிப்பிட்ட முடிவை மேற்கொள்ள வேண்டிய சமயம் பற்றி பிரதமர் தக்க உணர்வு கொண்டிருப்பதை பத்தாண்டு அனுபவம் காட்டியுள்ளது. அவர் எப்பொழுதும் சரியான முடிவையே மேற்கொண்டிருந்திறார் என்று மந்திரி கூறினார்.
சிரமங்கள் இல்லை அல்லது பிரதான பணிகளிலிருந்து மக்கள் கவனத்தை திருப்பும் அளவுக்கு இல்லை என பிரதமர் உணர்ந்தால், அவர் முடிவெடுக்கக்கூடும் என்று மத்திரி சொன்னார்.
ஏதிர்கட்சியினர் மனதில் அச்சம் அல்லது கவலை ஏற்படத் தேவையில்லை என்று கோகலே உறுதி கூறினார். ...
சர்க்காரியா கமிஷன் விசாரணையில் மீண்டும் வைத்தியலிங்கம் சாட்சியம்
சென்னை, நவ. 5 - இன்று சென்னையில் சர்க்காரியா கமிஷன் முன்பு "சர்க்கரை ஊழல்" பற்றிய புகார் மீதான விசாரணையில் முன்னான் முதலமைச்சர் கருணாநிதியின் அந்தரங்கச் செயலாளராக இருந்த எம். வைத்தியலிங்கம் சாட்சியமளித்தார்.
அவர் கூறியதாவது:
"தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அந்தரங்க செயாலாளராக 1969, 70, 71 ஆண்டுகளில் இருந்தேன்.
கைலாச கவுண்டர் சக்தி சுகர்ஸின் கமர்ஷியல் டைரக்டராக இருந்தார். எனக்கு ஈரோட்டில் திருமணம் நடந்தது. என் மாமனாருக்கு கைலாச கவுண்டரைத் தெரியும். என் மாமனாரும் ஈரோட்டில் வசிப்பவர். என் மாமனார் மூலம் கைலாசக் கவுண்டர் எனக்கு அறிமுகமானார்.
முன்னாள் முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்கையில் நாணும் சில சமயங்களில் அவரோடு செல்வதுண்டு. ஈரோட்டில் ஒருசமயம் அப்படிச் சென்றபோது கைலாச கவுண்டர் என்னை பிரயாணிகள் விடுதியில் சந்தித்தார். லெவி சர்க்கரையை எடுக்காததினால் சர்க்கரைத் தொழிலுக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியையும் அதனால் இத்தொழில் நசித்து வந்ததையும் மில் அதிபர்கள் சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு சம்பளமும், கரும்பு விவசாயிகளுக்குப் பணமும் கொடுக்க முடியாது இருந்ததையும் அவர் என்னிடம் சொன்னார். ...
Summary
6.11.1976: Approval of the Bill to extend the term of the Lok Sabha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


