5.11.1976: சர்க்காரியா கமிஷன் முன்பு சினிமாத் துறை பிரமுகர் சாட்சியம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

5.11.1976 - Dinamani
சென்னை: நவ. 4 - இரண்டு கைப் பெட்டிகளில் கைலாச கவுண்டர் கத்தை கத்தையாகப் ரூபாய் போட்டுக் கொடுத்த நோட்டுக்களை சென்னைக்குக் கொண்டு வந்து முன்னாள் முதல் அமைச்சரின் தனி உதவியாளர் வைத்தியலிங்கத்திடம் 1971-ஆம் ஆண்டில் கொடுத்ததாக திரைப்பட விநியோகத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஈரோடு என். சொக்கவிங்கம் பிள்ளை இன்று சர்க்காரியா முன் முற்பகலில் கடைசியாகச் சாட்சியம் அளித்தபோது கூறினார்.
சர்க்கரை பேர ஊழல் குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தும் நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியா முன் நேற்றுப் பிற்பகல் சாட்சியம் அளித்த கோத்தாரி சர்க்கரை ஆலையின் லால்குடி கிளை மானேஜர் டி.எல். ராகவன் இன்று காலை முதலில் தொடர்ந்து சாட்சியம் அளித்தார். அவர் தமது சாட்சியத்தில் கூறியதாவது:
16-2-70 தேதி, அரசின் உத்தரவுப்படி, 69-ம் ஆண்டு செப்டம்பர் - அக்டோபர், அக்டோபர் - நவம்பர் கோட்டாவுக்காக எங்களுக்கு ஒதுக்கப்பட்டவை13,085 மூட்டைகள். இதை நான் தான் மொத்த விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்தேன். மூட்டைக்கு 3 வீதம் சர்சார்ஜ் வசூலித்தேன். வசூலித்த சர்சார்ஜ் தொகையை மருதைப் பிள்ளையிடம் நானே ஒரு குறிப்புடன் கொண்டு போய்க் கொடுத்தேன். இதேபோல, பல முறை நான் அவரிடம் பணம் கொண்டுபோய்க் கொடுத்திருக்கிறேன். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் நான் அவரைச் சந்திக்க முடியாத நேரத்தில் அவர் டெலிபோன் மூலம் என்னிடம் ''இன்னாரை அனுப்புகிறேன். அவரிடம் கொடுத்து விடுங்கள்" என்பார். அவர் அனுப்பும் ஆள் டி.சி. கோத்தாரி அலுவலகத்திற்கு வந்து வசூலித்துக் கொண்டு போவார். நான் மொத்தத்தில் 15 முறை சர்க்கரை மூட்டைகளை விற்றபோது சர்சார்ஜ் வசூலித்து இருக்கிறேன். தான் மருதைப் பிள்ளையிடம் கொடுத்த பணம் எங்களை (சர்க்கரை ஆலையை) மொத்த விற்பனையாளர்களாக லெவி கோட்டாவுக்கு நியமித்ததற்காக முதலமைச்சருக்கும், உணவு அமைச்சருக்கும் தருவதற்காக கொடுக்கப்பட்டது. விற்பனைக்கான ரிஜிஸ்தர் இல்லை. விற்பனை செய்ததற்கான குறிப்புகள் உள்ளன. 1970 பிப்ரவரி 17 லிருந்து 1971 மே மாதம் வரை விற்பனை நடந்ததற்கான பட்டியலை நான் சமர்ப்பித்திருக்கிறேன். ஜனவரி - பிப்ரவரிக்கு 9356 மூட்டைகள் ஒதுக்கப்பட்டன. பிப்ரவரி- மார்ச் மாதத்திற்கு 9090 மூட்டைகள் ஒதுக்கப்பட்டன. ஜனவரி - பிப்ரவரி மாத கோட்டாவுக்கு மூட்டைக்கு ரூ. 3 வீதமும், பிப்ரவரி - மார்ச் மாத கோட்டாவுக்கு மூட்டைக்கு ரூ. 1.50 வீதமும், ஆகஸ்ட்-செப்டம்பர் கோட்டாவுக்கு மூட்டைக்கு 50 பைசா வீதமும் சர்சார்ஜ் வசூல் செய்யப்பட்டது. மொத்தத்தில் 1 லக்ஷத்து 28 ஆயிரத்து 341 மூட்டைகள் விற்கப்பட்டன. இதன் மூலம் ரூ.1 லக்ஷத்து 61 ஆயிரத்து 164 சர்சார்ஜ் வசூலித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
1970 பிப்ரவரியில் எங்கள் ஆலையில் 1 லக்ஷத்து 87 ஆயிரத்து 206 சர்க்கரை மூட்டைகள் தேங்கியிருந்தன. அதாவது சுமார் ரூ 1.50 கோடி மதிப்புள்ள சர்க்கரை தேங்கியிருந்தது. மார்ச் மாதத்தில் 1.34 லக்ஷம் மூட்டைகளும், ஏப்ரல் மாதத்தில் 1,48,787 மூட்டைகளும் ஜூன் மாதத்தில் 1.75 லக்ஷம் மூட்டைகளும் கைவசம் இருந்தன. மூட்டைக்கு இரண்டு ரூபாய் வீதம் வாங்கிய கடனுக்காக மாதம் வட்டி கொடுக்க வேண்டியிருந்தது. வட்டியாக மட்டும் சுமார் ரூ. 46 லக்ஷம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆகவே சர்சார்ஜ் வசூலித்து விற்கும் ஏற்பாடு அமலாக்கப்படாதிருந்தால் சர்க்கரைத் தொழில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும். இந்த நெருக்கடியான நிலையில் சர்சார்ஜ் வசூலித்து விற்கும் முறையை நாங்கள் ஏற்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டோம். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்குச் சிறு துரும்பும் பெரும் துணையாக அமைவது போல இந்த எற்பாடு எங்களுக்கு அமைந்திருந்தது. எங்கள் ஆலையில் 800 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சம்பளம் கொடுக்க வேண்டியிருந்ததோடு, கரும்பு சாகுபடியாளர்களுக்கும், யந்திரங்கள் சப்ளை செய்தவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. ...
இலங்கையில் அயல் நாட்டு தனியார் பாங்குகளின் கிளைகள் அரசுடமையாகும்
கொழும்பு, நவ. 4 - தங்கள் தாய் நாட்டில் அரசுடமையாக்கப்படாத அந்நிய பாங்குகளின் இலங்கை கிளைகள், ஸ்ரீலங்காவில் அரசுடமையாக்கப்படும்.
தேர்தல் ஆண்டுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படும் ஸ்ரீலங்கா பட்ஜெட்டின் முக்கிய அம்சம் இது தான்.
இதன்படி, இங்குள்ள 3 பிரிட்டிஷ் பாங்குகள், ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பாங்கு, நேஷனல் அண்ட் கிரிண்வேஸ் பாங்கு, சார்டர்டு பாங்கு ஆகியவை அரசுடமையாக்கப்படும்.
ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா, இந்தியல் ஓவர்சீஸ் பாங்கு, இந்தியன் பாங்கு, பாகிஸ்தான் ஹபிப் பாங்கு ஆகிய இதர அந்நிய பாங்குகள் இதனால் பாதிக்கப்படவில்லை.
அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்திய பாங்குகளின் கிளைகளை ஏன் அரசுடமையாக்கப் போவதில்லை என்பதை நிதி மந்திரி பண்டார நாயகா விளக்குகையில்,"ஸ்ரீலங்காவுக்கும் அதை யொட்டியுள்ள அண்டை நாடுகளுக்கு மிடையில் வர்த்தகத்தையும் தொடர்புகளையும் பரஸ்பர விரிவுபடுத்தும் பணியில் இந்த பாங்குகளுக்கு முக்கிய பங்கு உள்ளது'' என்றார்.
இந்த வருஷம் ஜவுளி இறக்குமதி அதிகரிக்கப்படும் என்பது பட்ஜெட்டின் மற்றொரு முக்கிய அம்சமாகும். இதற்குமுன்பு ஜவுளி இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு வந்திருப்பதற்கு, நேர்மாறான போக்காகும் இது.
பட்ஜெட்டின் இதர அம்சங்கள்: ரொட்டியின் விலையில் 5 சதம் குறைக்கப்படுகிறது. சர்க்கரை ரேஷன் அதிகரிக்கப்படுகிறது.
பட்ஜெட் உரையை முடிக்கையில் நிதி மந்திரி தேர்தல் பற்றிய ஹேஷ்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். "இந்த தேர்தல் ஆண்டில்""என்று குறிப்பிட்டார்.
Summary
5.11.1976: A prominent figure from the film industry testifies before the Sarkaria Commission
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


