
6.10.1976: சர்க்காரியா கமிஷன் முன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹரிபாஸ்கர் சாட்சியம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

6.10.1976 - Dinamani
புதுடில்லி, அக். 5 - முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் அவருடைய சக அமைச்சர்கள் சிலர் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்கள் பற்றி விசாரிக்கும் சர்க்காரியா கமிஷன் முன்பு இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹரிபாஸ்கர் சாட்சியம் அளித்தார்.
அவருடைய சாட்சியம் இன்று முடியவில்லை. நாளை தொடர்ந்து சாட்சியம் அளிப்பார்.
1969 முதல் 1972 வரை ஹரிபாஸ்கர் தமிழ்நாடு விவசாய டைரக்டராயிருந்தார்.
கமிஷனின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், 1959-ம் ஆண்டில் தாம் தமிழ்நாடு பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதாக பாஸ்கர் கூறினார். திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டபோது, தர்மலிங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது என்றார். அப்போது திருச்சியில் மாவட்ட தி.மு.க. செயலாளராக தர்மலிங்கம் இருந்தார். தாம் விவசாய டைரக்டராக நியமிக்கப்பட்டபோது, ராஜகோபால் தமக்கு தர்மலிங்கத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக ஹரிபாஸ்கர் கூறினார்.
விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிப்பதற்காக ஏக்கருக்கு ரூ. 7 வரை மத்திய அரசு மானிய உதவி அளித்ததாக சாட்சி கூறினார்., மானிய உதவித் தொகைக்கும், பூச்சி மருந்து தெளிப்பதற்கான காண்ட்ராக்ட் செலவுக்குமிடையேயான வித்தியாசம், விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ. 5 வீதம் வசூலித்து ஈடுசெய்யப்பட்டதாகக் கூறினார். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பல்வேறு ஆபரேட்டர்களிடமிருந்து விமானம் மூலம் பூச்சி மருத்து தெளிப்பதற்காக விவசாய டைரக்டரால் டெண்டர்கள் கோரப்பட்டதாகவும், டெண்டர் அனுப்பியவர்கள் முன்னிலையில் விவசாய டைரக்டரால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியால் டெண்டர்கள் திறக்கப்பட்டதாகவும் ஹரிபாஸ்கர் கூறினார். ...
கேள்வி : டைரக்டர் தாமகவே தம்முடைய மட்டத்திலேயே ஒரு காண்ட்ராக்டை செய்து கொள்ள முடியுமா?
விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு காண்ட்ராக்டுகளைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் அங்கீகராத்தைப் பெறுவதுதான் நடைமுறை என்று சாட்சி கூறினார். பரிசீலனைக்குப் பிறகு, அங்கீகாரத்துக்காக டெண்டர்கள் செயலகத்துக்கு அனுப்பப்பட்டன என்று சாட்சி கூறினார். அரசாங்கத்தின் அங்கீகாரம், விவசாயச் செலாளர் மூலம் தெரிவிக்கப்படுவது வழக்கம்
கமிஷன்: இத்தகைய பிரேரணைகன் மந்திரி முன் வைக்கப்பட்டனவா அல்லது முதலமைச்சர் முன்பு வைக்கப்பட்டனவா என்பதை உங்களால் கூற இயலுமா?
சாட்சி: பொதுவாக விவசாய அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரின் அங்கீகாரத்தை செயலாளர் பெறுவார் என்பதே என்னுடைய கருத்து. ...
அரிசி போக்குவரத்து தடை நீங்குமா? தமிழ்நாடு கவர்னர் தகவல்
திருச்சி, அக். 5 - தமிழ்நாட்டில் ஜில்லாக்களிடையே அரசிப் போக்குவரத்துக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது பற்றிய சர்க்கார் முடிவு சீக்கிரத்தில் அறிவிக்கப்படுமென்று கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று நிருபாகளிடம் கூறினார்.
குறுவை அறுவடையில் லெவி கொள்முதல் எதுவும் இராதென்றும் அவர் அறிவித்தார் ஆனால், மொத்த வியாபாரிகள், அரிசி மில்கள் வாங்கும் நெல்லுக்கு லெவி இருக்கும்.
மார்க்கெட்டில் அரிசி விலை உயராமல் தடுப்பதற்காகவும், ஏழைகளின் நன்மைக்காகவும் இப்போதுள்ள பொது வினியோக திட்டம் தொடர்ந்து நீடிக்கும்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் தென் பிராந்திய உணவு மண்டலம் அமலுக்கு வருமென்று பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளை நிருபர்கள் கவர்னரிடம் எடுத்துக் காட்டினார். அதை கவனித்து சர்க்கார் சீக்கிரத்தில் முடிவு எடுக்க வேண்டியிருக்கும் என்று கவர்னர் பதிலளித்தார். ...
Summary
6.10.1976: IAS officer Haribhaskar testifies before the Sarkaria Commission.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




