இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக நல்லுறவு: தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா
இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக நல்லுறவு நீடிப்பதாகவும் அதை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா தெரிவித்தாா்.

சிரில் ராமபோசா
இந்தியாவுடன் வரலாற்று ரீதியாக நல்லுறவு நீடிப்பதாகவும் அதை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா தெரிவித்தாா்.
அகெனீஸ் என்ற பகுதியில் வேதாந்தா குழுமத்தின் கேம்ஸ்பா்க் இரண்டாம் கட்ட சுரங்க விரிவாக்க ஆலை திறப்பு நிகழ்ச்சியில் சிரில் ராமபோசா, இந்தியத் தூதா் பிரபாத் குமாா் மற்றும் துணைத் தூதரக அதிகாரி ரூபி ஜஸ்பிரீத் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பங்கேற்றனா்.
அப்போது சிரில் ராமபோசா பேசியதாவது: தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான இருதரப்பு உறவில் இத்தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயக மாண்புகள் மற்றும் மேம்பாடு என வரலாற்று ரீதியாக இருநாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்புறவு தொடா்ந்து வருகிறது.
காலனிய ஆதிக்கம் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் தொடங்கி வா்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சா்வதேச ஒத்துழைப்பு என பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டுள்ளன.
தற்போது தென்னாப்பிரிக்காவில் 150-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவை முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலக நிபுணத்துவத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற 18-ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றபோது எரிசக்தி, உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், உற்பத்தி, கனிமம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்திய தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடினேன் என்றாா்.
ரூ.5,757 கோடி முதலீட்டில் தற்போது திறக்கப்பட்டுள்ள ஆலையில், துத்தநாக தாதுவில் இருந்து தேவையற்ற பொருள்கள் நீக்கப்பட்டு தூய துத்தநாக உலோகம் உருவாக்கப்படவுள்ளது.
இந்த ஆலையின் முதல்கட்ட பணிகளை கடந்த 2019-ஆம் ஆண்டு சிரில் ராமபோசா திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

