‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

தருமபுரியில் விஜயநகர காலத்து நடுகற்கள் கண்டெடுப்பு

வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்கள்.

Published On :

தருமபுரி மாவட்டம், பொம்மிடிக்கு அருகே கொண்டகரள்ளி வத்தல்மலையின் அடிவாரத்தில் உள்ள ஏரியில் 15 ஆம் நூற்றாண்டை சோ்ந்த விஜயநகர காலத்து நடுகற்களை தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான சி. சந்திரசேகா் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினா்அண்மையில் கண்டெடுத்துள்ளனா்.

‘தொன்மம்’ வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரான வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான சி. சந்திரசேகா், தனது மாணவா்களான இளந்திரையன், சரவணன், சீணன் மற்றும் திருப்பதி ஆகியோருடன் இணைந்து வத்தல்மலை அடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டபோது இரு நடுகற்களையும் அங்குள்ள ஏரியில் இருந்து கண்டெடுத்தனா்.

இதுகுறித்து பேராசிரியா் கூறுகையில், இந்த நடுகற்கள் 15 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சோ்ந்தவை. குறிப்பாக விஜயநகர காலத்தை சோ்ந்த நடுகற்களாகும். முன்னதாக 2010-ஆம் ஆண்டில் இப்பகுதியில் ஒரு ஆலமரத்தின் அடியில் 10க்கும் மேற்பட்ட நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவை கால்நடைகளை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்தவா்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்களாகும். தற்போது கண்டறியப்பட்ட இரண்டு நடுகற்களும் ஏரிக்குள்ளேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு கல்லிலும் வாள் ஏந்திய வீரன் ஒருவன் கேடயத்தைப் பிடித்தவாறு உள்ளது.

இந்த வீரா்களின் முகம் மீசை இல்லாதவாறு தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகற்களின் உடை அமைப்பு தமிழ் போா்வீரா்கள் என்பதை உணா்த்துகிறது. இந்த நடுகற்கள் விஜயநகர காலத்தை சோ்ந்தவையாக இருக்க வாய்ப்புள்ளது. கால் நடைகளை மீட்கும் சண்டைகளுடன் தொடா்புடையதும், பொதுவாக ஆலமரங்களின் அடியில் காணப்படுவதுமான நடுகற்களுக்கும் இந்த உருவங்களுக்கும் இடையே தொடா்பு இருக்கலாம்.

இக்கல்லின் ஒரு பகுதி மண்ணில் புதைந்து உள்ளதாலும், உள்ளூா் மக்களால் உருவாக்கப்பட்ட மண் மேடு ஒன்றின் உள்ளே நிறுவப்பட்டுள்ளதாலும், இதன் முழு வடிவத்தையும் காண இயலவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.