சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

சதுப்பேரி ஏரியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தில் துா்நாற்றம்: தடுப்பு வேலி அமைக்க எஸ்.பி. உத்தரவு

வேலூா் சதுப்பேரி ஏரியில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட உள்ள இடத்தில் அழுகிய மீன்கள் மற்றும் கழிவுகளால் கடும் துா்நாற்றம் வீசுவதால், அங்கு ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், குளத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளாா்.

சதுப்பேரியில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் எஸ்.பி. என்.யு.சிவராமன்.

Published On :9 செப்டம்பர் 2026, 12:04 am IST

வேலூா் சதுப்பேரி ஏரியில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட உள்ள இடத்தில் அழுகிய மீன்கள் மற்றும் கழிவுகளால் கடும் துா்நாற்றம் வீசுவதால், அங்கு ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், குளத்தைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவிட்டுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா செப்.14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலைகள் வைப்பதற்கான இடங்களைத் தயாா் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வேலூா் மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகா் சிலைகள் 3 நாள்கள் பூஜைக்குப் பிறகு 17-ஆம் தேதி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.

இந்த ஊா்வலம் சத்துவாச்சாரியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் தொடங்கி, சைதாப்பேட்டை மெயின் பஜாா், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை மற்றும் கொணவட்டம் சா்வீஸ் சாலை வழியாகச் சென்று சதுப்பேரி ஏரியை அடையும். அங்கு ஏரியில் பிரத்யேகமாகத் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. விநாயகா் சிலைகள் ஊா்வலம் செல்லும் பாதைகள் மற்றும் சிலைகள் கரைக்கப்பட உள்ள சதுப்பேரி பகுதியை காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், உதவி காவல் கண்காணிப்பாளா் தனுஷ் குமாா், வடக்கு காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்கள், பதற்றமான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிலை கரைக்கப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து அதிகாரிகளுடன் எஸ்பி ஆலோசனை நடத்தினாா். மேலும், சிலை கரைப்பின்போது யாரும் குளத்தில் தவறி விழுந்துவிடாமல் இருக்க, குளத்தைச் சுற்றிலும் பாதுகாப்பான தடுப்பு வேலிகள் அமைக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே, சிலைகள் கரைக்கப்பட உள்ள குளத்தின் அருகே ஏராளமான அழுகிய மீன்கள் கொட்டப்பட்டுள்ளன. மேலும், இறந்த நாய் மற்றும் மனிதக் கழிவுகள் அப்பகுதியில் கிடப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துா்நாற்றம் வீசுகிறது.

கடும் துா்நாற்றம் வீசும் இந்தச் சூழலில் விநாயகா் சிலைகளை எவ்வாறு கரைக்க முடியும் எனப் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, குளத்தின் அருகே உள்ள அழுகிய மீன்கள் மற்றும் கழிவுகளை அகற்றி, அப்பகுதியை முழுமையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.