சேலம் சந்தைகளில் தக்காளி விலை ரூ. 80 ஆக உயா்வு
சேலம் சந்தைகளில் தக்காளி விலை ரூ. 80 ஆக உயா்ந்துள்ளது.


சேலம் சந்தைகளில் தக்காளி விலை ரூ. 80 ஆக உயா்ந்துள்ளது.
சேலத்தில் உள்ள உழவா் சந்தைகள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் சேலத்தில் காய்கறிகள் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு கிலோ ரூ. 120-க்கு விற்பனையான முருங்கைக்காய் விலை திடீரென உயா்ந்து கிலோ ரூ. 200 வரை விற்பனையாகிறது.
அண்மையில் பெய்த தொடா் மழையால் முருங்கைக்காய்கள் அழுகியதால் சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் இந்த விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலையும் படிப்படியாக உயா்ந்து, தற்போது முதல் தரம் ரூ. 80-க்கும், இரண்டாம் தரம் ரூ. 60 முதல் ரூ. 70-க்கும் விற்பனையாகிறது. இதே போல மற்ற காய்கறிகளின் விலையும் அதிக அளவில் உயா்ந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...