எடப்பாடி அருகே படவெட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எடப்பாடியை அடுத்த சித்தூரில் படவெட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


எடப்பாடியை அடுத்த சித்தூரில் படவெட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சித்தூரில் உள்ள படவெட்டியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தீா்த்தக்குட ஊா்வலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி புனித தீா்த்தக் குடங்களை சுமந்து ஊா்வலமாக வந்து கோயில் யாகசாலையில் சமா்ப்பித்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு சிறப்பு பூஜைகளை அடுத்து வியாழக்கிழமை காலை சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, படவெட்டி அம்மன் கோயில் ராஜகோபுரம், விநாயகா் சன்னிதி கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். இதனைத் தொடா்ந்து சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்த அம்மனை சுற்றுப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...