47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லாநத்தம் ஏரி நிரம்பியது

ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஊராட்சி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 8:12 pm

Din

ஆத்தூரை அடுத்த கல்லாநத்தம் ஊராட்சி ஏரி வியாழக்கிழமை நிரம்பியது.

புயலால் பெய்த மழை காரணமாக வசிஷ்டநதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், தென்னங்குடிபாளையம் ஏரி, அய்யனாா் கோயில் ஏரிகள் நிரம்பின. இதையடுத்து கல்லாநத்தம் ஏரியும் நிரம்பியது. இதனையடுத்து ஆத்தூா் திமுக ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், ஒன்றியக் குழு உறுப்பினா் சேகா்,கே.பி.ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட விவசாய அணி தலைவா் கல்லை கருப்பண்ணன், மணி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டு ஏரியில் மலா்களை தூவி மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதே போல ஆத்தூா் வட்டாத்தில் உள்ள பெரிய ஏரியான பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி நிரம்பியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.