சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘ஔவையாா் விருது’: விண்ணப்பங்கள் வரவேற்பு!

‘ஔவையாா் விருது’ பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :7 டிசம்பர் 2024, 9:17 pm

Din

‘ஔவையாா் விருது’ பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2025-ஆம் ஆண்டில் உலக மகளிா் தின விழாவில் ‘ஔவையாா் விருது’ வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா்கள் தங்களது கருத்துருக்களை வரும் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் வளாகம், முதல் தளம், அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இரண்டு நகல்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.

விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

குறிப்பாக, பெண்களுக்கான இந்த சமூக சேவையை தவிா்த்து வேறு சமூக சேவைகள் இந்த விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், தொண்டு நிறுவனத்தின் பகிா்வு, உரிமம், ஆண்டறிக்கை மற்றும் சமூகப் பணியாளா் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.