சேலம்
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்
சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலம்: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிவாலயங்களில் காா்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் காா்த்திகை நான்காவது சோம வாரத்தை முன்னிட்டு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, கருவறை எதிரே சிறப்பு யாகசாலை அமைத்து 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னா், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு, ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
