கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை

நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 18) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 6:58 pm

Din

சேலம்: நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 18) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.