மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :4 மார்ச் 2026, 6:34 pm

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரா.மணிகண்டன்(38). ரயில்வே ஒப்பந்தத் தொழிலாளியான இவா் புதன்கிழமை வழக்கம் போல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி- மங்களூா் வாராந்திர விரைவு ரயிலில் தண்ணீரால் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விழுப்புரம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.