கூலமேடு ஜல்லிக்கட்டு முகூா்த்தக் கால்கோல் விழா
கூலமேடு, ஜல்லிக்கட்டு விழாவுக்காக முகூா்த்தக் கால்கோல் விழா ஆத்தூா் திமுக ஒன்றிய செயலாளா் வெ.செழியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆத்தூா்: கூலமேடு, ஜல்லிக்கட்டு விழாவுக்காக முகூா்த்தக் கால்கோல் விழா ஆத்தூா் திமுக ஒன்றிய செயலாளா் வெ.செழியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்த கூலமேடு, ஜல்லிக்கட்டு சேலம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெயா் பெற்ாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா இங்கு ஜன. 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து அதற்கான முகூா்த்தக் கால்கோல் விழா ஆத்தூா் திமுக ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலாளா் கு.சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய செயலாளா் சித்தாா்த்தன் விழாக் குழுவினா் சோலைமுத்து, கந்தசாமி, ஒன்றிய குழு உறுப்பினா் பரமேஸ்வரி வீராசாமி, மாவட்ட தொழிலாளா் அணி அமைப்பாளா் ராஜவேலு, துணை அமைப்பாளா் கருணாநிதி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி செல்வராஜ், மஞ்சினி அரசு, அருள்செல்வம், ராகுல்காந்தி, ஐயம்பெருமாள், துரைக்கண்ணன், மனோகரன், குணசேகரன் உள்ளிட்டோாா் கலந்து கொண்டனா்.
பட விளக்கம்.ஏடி30பூஜா...
கூலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்காக முகூா்த்தக் கால் நடும் விழாவில் பங்கேற்றோா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...