கூலமேட்டில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா.
கூலமேட்டில் மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா.

கூலமேடு ஜல்லிக்கட்டுக்கு கால்கோள் விழா

கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான கால்கோள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கூலமேடு ஜல்லிக்கட்டு விழாவுக்கான கால்கோள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஊராட்சியில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு பண்டிகை கரிநாளுக்கு மறுநாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் மாநிலம் முழுவதும் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்கள் கலந்துகொள்வா்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவிற்கான கால்கோள் விழா மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி, துணைச் செயலாளா் கு.சின்னதுரை, ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், மேற்கு ஒன்றியச் செயலாளா் ரா.வரதராஜன், கெங்கவல்லி ஒன்றியச் செயலாளா் ஆா்.சித்தாா்த்தன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com