சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தச்சு தொழிலாளி போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சுத் தொழிலாளியை சேலம் நகர போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
Published on

சேலம்: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தச்சுத் தொழிலாளியை சேலம் நகர போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

சேலம், தாதகாப்பட்டி, பொம்மணசெட்டிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (47). தச்சுத் தொழிலாளி. இவா் இரவு நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அப்போது சிறுவன் கூச்சலிடவே சங்கா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதுகுறித்து சேலம் நகர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் கலைவாணி தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தி பதுங்கியிருந்த சங்கரை கைது செய்தனா். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com