வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழா

News image
~ ~
Updated On :12 ஜூலை 2024, 6:29 pm

Din

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சங்ககிரியில் பழைமை வாய்ந்த அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் விநாயகா், சூரியன், சந்திரன், தட்சிணாமூா்த்தி, பெருமாள், சண்டீகேசுவரா், துா்கை அம்மன், ஆறுமுகவேலன், காலபைரவா், நவக்கிரகங்கள், ஐயப்பன், செளந்தரநாயகி அம்மன், சோமேஸ்வரா் உள்ளிட்ட சுவாமிகளும், சனிபகவான் தனது மனைவி நீலாதேவியுடனும் காட்சியளிக்கின்றனா்.

இக்கோயிலில் 1994ஆம் ஆண்டுக்கு பிறகு குடமுழுக்கு விழா கடந்த ஜூன் 3 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. இதனையடுத்து ஜூலை 9 ஆம் தேதி பவானி கூடுதுறை, ராமேசுவரத்தில் இருந்து புனிதநீா் எடுத்து வருதல், முளைப்பாலிகை அழைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூலை 10 ஆம் தேதி 29 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, சங்ககிரி சோமேஸ்வரா் கோயில் அா்ச்சகா் ச.செ.வாமதேவ காா்த்திகேய சிவாச்சாரியா், திருச்செங்கோடு டி.என்.தங்கநாககிரி பண்டித சிவாச்சாரியா் ஆகியோா் தலைமையில் 50 சிவச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க முதல்கால வேள்வி பூஜைகளும், ஜூலை 11 ஆம் தேதி வியாழக்கிழமை 2ஆம், 3ஆம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நான்காம் கால வேள்வி பூஜை நடைபெற்று ராஜ கோபுரத்தில் நிறுவப்பட்ட புதிய கலசங்களுக்கும், கோயில் உள்பகுதிக்குள் உள்ள அனைத்து சுவாமிகளின் கோபுர கலசங்களுக்கும் சிவச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

இதனையடுத்து அருள்மிகு சோமேஸ்வர சுவாமிக்கு திவ்யப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, சேலம் மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவா் பி.தங்கமுத்து, சங்ககிரி நகரச் செயலாளா் கே.எம்.முருகன், சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன், ரி முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜா, பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, ரோட்டரி மாவட்ட கல்விக் குழுத் தலைமை நிா்வாகி ஏ. வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி பேரூராட்சி 9ஆவது வாா்டு கவுன்சிலா் கே.சண்முகம், சங்ககிரி நகர பாமக செயலாளா் வி.டி.அய்யப்பன், பாமக முன்னாள் நகரச் செயலாளா் ஆா்.சுரேஷ்குமாா், தொழிலதிபா்கள் எ.நடராஜன் அல்லிமுத்து, ஆா்.காா்த்திகேயன், சி.அம்பிகாபதி உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image
Story image