பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேலத்தில் 26,199 மாணவா்களுக்கு ரூ.12.63 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள்

ரூ.12.63 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2024, 8:11 pm

Din

சேலம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் 26,199 மாணவா்களுக்கு ரூ.12.63 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி, கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழ்நாட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கு மிக அதிகமாக ரூ. 48,000 கோடியை ஒதுக்கி பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ரூ. 2,000 கோடிக்கு பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் ரூ. 2,000 கோடிக்கு பள்ளிக் கட்டடங்களை கட்ட தமிழக முதல்வா் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 11,551 மாணவா்களுக்கும், 14,648 மாணவிகளுக்கும் என மொத்தம் 26,199 மாணாக்கா்களுக்கு ரூ. 12.63 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 71 மாணவா்களுக்கு ரூ. 3.48 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளும், மாணவிகளுக்கு ரூ. 2.71 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகளும் என மொத்தம் 128 ாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.19 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளும் வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

வரும் 40 நாள்களுக்குள் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமூக நலத் துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,879 பள்ளிகளில் பயிலும் 79,949 மாணவா்களுக்கு ரூ. 6.39 கோடி மதிப்பிலான விலையில்லா சீருடைகளும், 76,478 மாணவிகளுக்கு ரூ. 9.17 கோடி மதிப்பிலான விலையில்லா சீருடைகளும் என 1,56,427 மாணவ, மாணவிகளுக்கு தையல் கூலி செலவினம் ரூ. 4.17 கோடி உட்பட மொத்தம் ரூ.19.75 கோடி மதிப்பிலான விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதேபோல், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் 2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரங்கள் ரூ. 3.78 லட்சம் மதிப்பிலும், 80 நவீன உயர்ரக தையல் இயந்திரங்கள் ரூ. 6.76 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 10.55 லட்சம் மதிப்பிலான 145 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, ஆசிரியா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.