புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆத்தூரில் நகராட்சி ஆணையா் ஆய்வு

ஆத்தூரில் நகராட்சி ஆணையா் ஆய்வு

News image
Updated On :12 ஜூன் 2024, 9:04 pm

Din

ஆத்தூா், ஜூன் 12: ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால், புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தைச் சுற்றி தனியாா் நிறுவனங்கள் சாா்பில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை மாலை வெளியூா் செல்ல காத்திருந்த பயணிகள் மீது விளம்பர பதாகை விழுந்ததில் பயணி ஒருவா் காயமடைந்தாா்.

இந்நிலையில் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் மேலாளா்களிடம் பதாகைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யுமாறும், தரமற்ற பொருள்களைக் கொண்டு பதாகைகள் அமைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாா். பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்காத வகையில் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

பட விளக்கம்.ஏடி12கமிஷ்னா்....

ஆத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால்.