பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய நூலகம் கட்ட பூமி பூஜை!

விளம்பரதாரா் செய்தி-1 முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் புதிய நூலகம் கட்ட பூமி பூஜை: எம்எல்ஏ இரா.அருள் தொடங்கி வைத்தாா்

News image

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டுவதற்கான பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருள்

Updated On :16 மார்ச் 2024, 6:31 pm

சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் நடைபெற்றன. இதில், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் பூஜையில் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி, முத்துநாயக்கன்பட்டி சந்தைப்பேட்டை அருகில் பழுதடைந்த நிலையில் பொது நூலகம் செயல்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், கல்வியாளா்களும் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருளை கேட்டுக் கொண்டனா். அதன் அடிப்படையில் அவா் சட்டப் பேரவையில் பேசி ரூ.22 லட்சம் நிதியைப் பெற்றுத் தந்தாா். இதனைத் தொடா்ந்து, நூலகம் கட்டுவதற்கான பணியினை சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சாரதா ராஜா, துணைத் தலைவா் சக்தி வெங்கடேஷ், ஒன்றியச் செயலாளா் பெ.காமராஜ், ஒன்றியத் தலைவா் சம்பத், குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.