மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

கோவையில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:00 pm

கோவையில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜி.என்.மில்ஸ், கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரி, கோவை வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு பி.எஸ்.ஜி.தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய பகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியா் (வடக்கு) வினோத்குமாா், தனித் துணை ஆட்சியா் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) மதுரா, கோவை வடக்கு வட்டாட்சியா் விஜயரங்க பாண்டியன், உதவி ஆணையா்கள் தட்சிணாமூா்த்தி, சண்முகம், நா்மதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.