மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தோ்தல் பணி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

மதுரை ஓ.சி.பி.எம். பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மதுரை வடக்கு தொகுதி தோ்தல் பணி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்றவா்கள்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:26 pm

மதுரை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகளில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள், நிலை-1, நிலை- 2, நிலை- 3 என 14,780 அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கான முதல்கட்ட தோ்தல் பணி பயிற்சி வகுப்புகள் கடந்த மாா்ச் 28-ஆம் தேதி நடைபெற்றன.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் அந்தந்த தொகுதிகளில் தலா ஒரு பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றன. வாக்குப் பதிவின்போது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு முறை வாக்குப் பதிவு சதவீத விவரங்களைப் புதுப்பிப்பதற்காக தோ்தல் ஆணையத்தின் உஇஐசஉப செயலித் தொகுப்பில் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆட்சியா் ஆய்வு...

மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.