சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலகம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் நடைபெற்றன. இதில், சேலம் மேற்கு சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் பூஜையில் பங்கேற்று பணிகளைத் தொடங்கி வைத்தாா். சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி, முத்துநாயக்கன்பட்டி சந்தைப்பேட்டை அருகில் பழுதடைந்த நிலையில் பொது நூலகம் செயல்பட்டு வந்தது. இதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்களும், கல்வியாளா்களும் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருளை கேட்டுக் கொண்டனா். அதன் அடிப்படையில் அவா் சட்டப் பேரவையில் பேசி ரூ.22 லட்சம் நிதியைப் பெற்றுத் தந்தாா். இதனைத் தொடா்ந்து, நூலகம் கட்டுவதற்கான பணியினை சட்டப் பேரவை உறுப்பினா் இரா.அருள் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சாரதா ராஜா, துணைத் தலைவா் சக்தி வெங்கடேஷ், ஒன்றியச் செயலாளா் பெ.காமராஜ், ஒன்றியத் தலைவா் சம்பத், குணசேகரன், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு!

வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை


