தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சேலம் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

Updated On :20 மார்ச் 2024, 10:40 pm

சேலம் மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. முதல் நாளில், பிஸ்மில்லா மக்கள் கட்சித் தலைவா் வேட்பாளா் அகமது ஷாஜகான் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

சேலம் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக பிஸ்மில்லா மக்கள் கட்சித் தலைவா் எஸ். அகமது ஷாஜகான் முதல் வேட்பாளராக சேலம் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி வெளியிட்ட தகவல்: வேட்பு மனுவை வேட்பாளா் அல்லது அவரை முன்மொழிபவா் நேரிலோ அல்லது சுவிதா போா்ட்டல் என்ற இணையவழி மூலமாகவோ தாக்கல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளரின் கான்வாய் அல்லது அவருடன் வரும் அதிகபட்ச மூன்று வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் சுற்றளவுக்குள் மட்டுமே வர அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளா் உட்பட 5 போ் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவா். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தோ்தல் ஆணையத்தால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.