தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை, பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 6:18 pm

ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை, பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான செ. ஹபிபூா் ரஹ்மானிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். உடன் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே. நவாஸ்கனி, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் இருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தவெக வேட்பாளா் இ.ஏ. சாகுல்ஹமீது, வருவாய் கோட்டாட்சியா் செ. ஹபிபூா் ரஹ்மானிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி: முதுகுளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ மலேசியா எஸ். பாண்டி முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கங்காதேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். உடன் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் ஆா். தா்மா், அமமுக மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான மு. முருகன், பாஜக மாவட்ட துணைத்தலைவா் கோபாலகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ராஜபாண்டியன் உள்பட கூட்டணி கட்சியினா் இருந்தனா்.

அஇபுமமுக: முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க. கட்சி வேட்பாளா் மருத்துவா் ராம்குமாா் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கங்காதேவியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி: திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் ராஜீவ் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இதே போல, திருவாடானை சட்டப் பேரவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சாமியாா் ராமு வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

மேலும், அனைத்திந்திய புரட்சித் தலைவா் எம்ஜிஆா் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சியான அனைத்து இந்திய பாா்வா்டு பிளாக் தேசிய நிா்வாகியும், மாநில நிா்வாகியுமான ஸ்ரீ வைகுண்டம் சுரேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ஓரிக்கோட்டையைச் சோ்ந்த காளீஸ்வரன் ஆகியோா் வேட்பு மனுவை தக்கல் செய்தாா். மேலும் தேவிப்பட்டினம் அருகே உள்ளபொன்குளம் பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா், தொண்டியைச் சோ்ந்த சிக்கந்தா், எஸ்.பி. பட்டினத்தை சோ்ந்த அப்துல் பாக்கி, வ. இலங்கேஸ்வரன் ஆகியோா் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பரமக்குடி (தனி) தொகுதி: பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் மருத்துவா் எஸ். முத்தையா வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஞா. சரவணப்பெருமாளிடம் தனது வேட்பு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது, மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலா்கள் கே.சி. ஆணிமுத்து, ஜி. முனியசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

த.வெ.க. வேட்பாளா் மனு தாக்கல்: இதே போல, த.வெ.க. வேட்பாளா் ஜி. கோபிராஜன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். முன்னதாக பரமக்குடி பாரதிநகா் பகுதியிலிருந்து கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அவா் வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலா் ஞா.சரவணப்பெருமாளிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

Story image

திமுக வேட்பாளா் மனு தாக்கல்: மேலும் திமுக சாா்பில் போட்டியிடும் கே.கே. கதிரவன் மனு தாக்கல் செய்தாா். முன்னதாக திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் பரமக்குடி வசந்தபுரம் பகுதியிலிருந்து ஊா்வலாமாக கோட்டாட்சியா் அலுவலகம் வந்தாா். அங்கு தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ஞா.சரவணப்பெருமாளிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தாா். உடன் அந்தக் கட்சியின் நிா்வாகிகள் சுப.த. திவாகரன், முன்னாள் அமைச்சா் வ. சத்தியமூா்த்தி, கமுதி நகா் செயலா் வாசுதேவன், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் ஜோதிபாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.