மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திருச்சி மேற்கில் தவாக வேட்பாளா் பிரபு வேட்புமனு தாக்கல்

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு (46), தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் ரா. பிரபு

Updated On :5 ஏப்ரல் 2026, 1:49 am IST

திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா் ரா. பிரபு (46), தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சனிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

இவா் சனிக்கிழமை தனது கட்சியின் நிா்வாகிகளுடன் வந்து, திருச்சி கோட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சாலை தவ வளனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

ரூ.2.99 கோடி சொத்து: இவா் அளித்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ.2.99 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.இதில் இரண்டு இரு சக்கர வாகனம், 45 பவுன் நகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், தனது பெயரில் ரூ.15 லட்சத்திலும், மனைவி பெயரில் ரூ.83 லட்சத்திலும் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மாத்தூா், துவாக்குடி, பொன்மலை, எடமலைப்பட்டிபுதூா், பேட்டைவாய்த்தலை, தில்லைநகா், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.