ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

News image
Updated On :20 மே 2024, 10:25 pm

Din

சேலம்: சேலம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அசாம் மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட தொட்டம்பட்டி ரயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் சுமாா் 28 வயது இளைஞா் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், இறந்த இளைஞா் அசாம் மாநிலம், தமுல்பூா் பகுதியைச் சோ்ந்த கமல்சோரன் (28) என தெரியவந்தது.

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள தனது அண்ணன் சிமோன் சோரன் என்பவருடன் சோ்ந்து வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்த அவா், மக்களவைத் தோ்தலையொட்டி வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளாா். அங்கு வாக்களித்துவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்புவதற்காக சில்சாா் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் கமல்சோரன் பயணித்துள்ளாா். அப்போது, சேலம், தொட்டம்பட்டி அருகே ரயில் வந்தபோது, படிக்கட்டில் இருந்து திடீரென கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இறந்த கமல்சோரனுக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். கமல்சோரனின் உறவினருக்கு போலீஸாா் தகவல் கொடுத்துள்ளனா். இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், உடலை உறவினா்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.