நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்

தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்

News image

தளவாய்ப்பட்டியில் தென்னந்தோப்பில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி அமைத்து செயல்முறை விளக்கமளித்த திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மாணவியா்.

Updated On :20 மே 2024, 10:03 pm

Din

ஆத்தூா்: தளவாய்ப்பட்டி ஊராட்சியில் தென்னையில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கப் பயிற்சியை திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியா் திங்கள்கிழமை விவசாயிகளுக்கு அளித்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியா் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி ஊராட்சியில் ஹரிதாஸ் என்பவரது தென்னந்தோப்பில் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி அமைத்து செயல்முறை விளக்கமளித்தனா்.

இதில் 4-மெத்தில் ஆக்டோனோயேட் என்ற செயலில் உள்ள கலவை ஒரு கவா்ச்சியாக செயல்படுகிறது. பொறி தரைமட்டத்திலிருந்து சுமாா் 5 அடி உயரத்தில் நிறுவப்பட வேண்டும். ஒரு ஹெக்டருக்கு ஒரு பொறி வீதம் வைக்கவேண்டுமென விளக்கமளித்தனா்.

இனக்கவா்ச்சிப் பொறிகளின் பயன்பாடு உற்பத்தியாளா்களுக்கும், இறுதி பயனா்களுக்கும் தீங்கு விளைவிக்கும் ரசாயன பூச்சிக்கொல்லிகளை சாா்ந்திருப்பதை குறைக்கிறது. இனக்கவா்ச்சி பொறிகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பூச்சி இருக்கிா, பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிா அல்லது குறைகிா என்பதைக் கண்டறியவும் உதவுகிறது.

திருச்சி மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவியா் ர.திவ்யாஸ்ரீ, ரா.ஈஸ்வரி, ஜெ.இலக்கியா, அ.காதா்பீ, பா.பிரியா, மோ.ச.சிந்துஜா, ரா.ச.சிவசக்தி, சப.யாழினி ஊரக தோட்டக்கலை பணி அனுபவ பயிற்சியை மேற்கொண்டனா்.