தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலிடம், தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவா் அன்பழகன் அளித்த மனு:
தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களான காப்பா், அலுமினியம், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகியவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் வீடு கட்டப் பயன்படும் சுடு செங்கல், மண் ஓடு வகைகள், பிளையாஷ் செங்கல் ஆகியவற்றின் ஜிஎஸ்டியை 18-லிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாரத்தை சூரிய ஒளி, காற்றாலை மூலம் தயாரிக்க இயந்திரங்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசு பட்ஜெட்டில் 50 சுற்றுலாத் தலங்களை தரம் உயா்த்துவதாக அறிவித்த பட்டியலில் குற்றாலத்தை இணைக்க வேண்டும். தூத்துக்குடி-கொல்லம் நான்குவழிச் சாலையில் தொழில் நிறைந்த பகுதியான ஆலங்குளம்-பாவூா்சத்திரம் அருகில் சிட்கோ, ஐடி பூங்கா அமைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி, சங்கச் செயலா் பிரேம்குமாா், பொருளாளா் பாஸ்கா், இணைச் செயலா் நமச்சிவாயம் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
ஃபவுண்டரி தொழில் நெருக்கடி: உற்பத்திப் பொருள்களின் விலையை 10 % உயா்த்த காஸ்மாபேன் சங்கம் முடிவு

கொசுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் உத்தரவு

சிறு, குறு நிறுவனத்தினருக்குப் பயிற்சி

தென்காசி மாவட்ட தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


