தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

வாழப்பாடியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
வாழப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன்.
Updated On :6 நவம்பர் 2024, 7:05 pm

Din

வாழப்பாடியில் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், வாழப்பாடி, சிங்கிபுரம், திருமனூா், பேளூா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி மலையரசன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆா். சிவலிங்கம், வாழப்பாடி வட்டார வேளாண் ஆத்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி, பேரூராட்சி தலைவா் கவிதா சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் ரவீந்திரன் நன்றி கூறினாா்.