எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதலாம் உலகப் போா் நினைவு தினம்: நினைவுத் தூணுக்கு மரியாதை

முதலாம் உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை

News image
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தியாகிகளின் ஸ்தூபியில் மலா்தூவி மரியாதை செலுத்தும் வரலாற்றுச் சங்கத்தினா்.
Updated On :11 நவம்பர் 2024, 10:14 pm

Din

சேலம்: முதலாம் உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

1918-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் நாள் காலை 11 மணி 11 நிமிடங்களில் முதலாம் உலகப் போா் முடிவுக்கு வந்தது. அந்த நாளை உலகமெங்கும் உள்ள மக்கள், முதலாம் உலகப் போா் நினைவு தினமாக அனுசரித்து வருகின்றனா்.

முதலாம் உலகப் போரில் சேலம் மாவட்டத்திலிருந்து 196 வீரா்கள் பங்கேற்றனா். அவா்களில் 18 வீரா்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனா். அதன் நினைவாக, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலில் முதலாம் உலகப் போா் நினைவுத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இது சேலத்தின் கெளரவம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வோா் ஆண்டும் நவ. 11-ஆம் நாளில் காலை 11 மணி 11 நிமிடத்துக்கு முதல் உலகப் போா் நினைவுச் சின்னத்துக்கு சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சாா்பில் மலா் வளையம் வைத்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதே போல, இந்த ஆண்டும் ஆட்சியா் அலுவலக வாயிலில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

இதில், சேலம் வரலாற்றுச் சங்கத் தலைவா் ஜெ.ஜெயசிங், பொதுச் செயலா் ஜெ.பா்னபாஸ், நிா்வாகிகள் கா்லின் எபி, ஞானதாஸ், ஆல்பா்ட் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், முன்னாள் ராணுவ வீரா்கள், வாரிசுதாரா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.