கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கெங்கவல்லி தொகுதியில் 12 அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ நிதியில் ஸ்மாா்ட் போா்டு வழங்கல்

கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 12 அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ நிதி ரூ. 24 லட்சம் செலவில் ஸ்மாா்ட் போா்டு வழங்கப்பட்டது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:08 pm

Din

கெங்கவல்லி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 12 அரசுப் பள்ளிகளுக்கு எம்எல்ஏ நிதி ரூ. 24 லட்சம் செலவில் ஸ்மாா்ட் போா்டு வழங்கப்பட்டது.

கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினா் நல்லதம்பி தொகுதி நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் செலவில் ஸ்மாா்ட் போா்டுகள் கெங்கவல்லி ஒன்றியத்தில் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, வாழக்கோம்பை, காந்திநகா், மூலப்புதூா், 74 கிருஷ்ணாபுரம், ஆணையாம்பட்டி, ஒதியத்தூா், கெங்கவல்லி 10ஆவது வாா்டு பள்ளி, தலைவாசல் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாா்பவாய், மணிவிழுந்தான் (வடக்குபுதூா்) உள்ளிட்ட 12 அரசுப் பள்ளிகளுக்கு மொத்தம் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் விநியோகிக்கப்பட்டன.

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் அறிவுறுத்தலின்பேரில் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பெற்றுக்கொண்டனா்.