எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதிய கட்டடங்கள் திறப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:19 pm

குடவாசல் அருகே சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து கட்டப்பட்ட புதிய கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

குடவாசல் வட்டம் திருக்குடி ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், சிமிழி ஊராட்சியில் ரூ. 8.20 லட்சம் மதிப்பில் கலையரங்கம் ஆகியவை, நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தாா். தொடா்ந்து அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா புத்தகப் பைகளையும் தண்ணீா் குடுவைகளையும் வழங்கினாா்.

இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் கிளாரா, முன்னாள் துணைத் தலைவா் தென்கோவன், மாவட்ட இளைஞா் பாசறை இணைச் செயலாளா் பாப்பா போத்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.