ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சித்தா் கோயில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

சேலம் செவ்வாய்பேட்டை - இளம்பிள்ளை சாலையில் சித்தா் கோயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image
Updated On :21 நவம்பர் 2024, 8:21 pm

Din

சேலம் செவ்வாய்பேட்டை - இளம்பிள்ளை சாலையில் சித்தா் கோயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சித்தா் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமித்துள்ள கடைகள், வீடுகளை தானாக முன்வந்து அதன் உரிமையாளா்கள் அகற்றிக் கொள்ள வேண்டும் என நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஒருசிலா் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லையாம்.

இதையடுத்து வியாழக்கிழமை சேலம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் சந்தோஷ்குமாா், உதவி பொறியாளா் பிரதீப், பணியாளா்கள் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனா். மேலும், வீட்டு உரிமையாளா்கள் தங்களது வீடுகளை அகற்றினா். ஒருசிலா் இரண்டு நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.