ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தம்மம்பட்டியில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தம்மம்பட்டியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தை ஆய்வுசெய்த சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி.
Updated On :27 நவம்பர் 2024, 6:41 pm

Din

தம்மம்பட்டியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தம்மம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், கட்டி முடிக்கப்பட்ட மின் மயானம், தம்மம்பட்டியில் உள்ள வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டடம் ஆகியவற்றை சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி

புதன்கிழமை ஆய்வுசெய்தாா். அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது தம்மம்பட்டி நகர திமுக செயலாளா் சண்முகம், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன், தம்மம்பட்டி பேரூராட்சிமன்ற தலைவா் கவிதா ராஜா, துணைத் தலைவா் சந்தியா ரஞ்சித் குமாா், கலியவரதராஜ், பழனிமுத்து உள்பட கவுன்சிலா்கள் இணைந்து ஆட்சியரிடம் மனு அளித்தனா். அதில், தம்மம்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஊருக்கு வெளியே புறவழிச் சாலை அமைக்க வேண்டும், தம்மம்பட்டி சிவன் கோயில் அருகே சுவேத நதியின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும், தம்மம்பட்டியில் கட்டி முடிக்கப்பட்ட மின் மயான வளாகத்தில் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியுள்ளனா்.

மனுவை பெற்ற ஆட்சியா் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண்பதாகத் தெரிவித்தாா். ஆய்வின்போது தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான்சேட், வட்டார மருத்துவா் வேலுமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.