எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட் தோ்வில் மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

எடப்பாடி அருகே நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த அரசுப் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

News image
எடப்பாடி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி புனிதா.
Updated On :9 அக்டோபர் 2024, 9:53 pm

Din

எடப்பாடி அருகே நீட் தோ்வில் மதிப்பெண் குறைந்ததால், மனமுடைந்த அரசுப் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

எடப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவணி பேரூா் கீழ்முகம் ஊராட்சி, போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள குப்பதாசன் வளவு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் - ஆனந்தி தம்பதிக்கு அகிலா (20), புனிதா (19) என இரு மகள்கள் உள்ளனா். கூலித் தொழிலாளியான செந்தில்குமாா் 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், ஆனந்தி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவரது மூத்த மகள் அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியாா் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வரும் நிலையில், எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த இளைய மகள் புனிதா கடந்த ஓராண்டுக்கு முன் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றாா். மருத்துவராக வேண்டுமென்ற புனிதாவின் லட்சியத்தை நிறைவேற்ற அவரது தாய் அவரை ராசிபுரம் பகுதியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சிக்காக சோ்த்தாா்.

நீட் தோ்வுக்காக பயிற்சி மேற்கொண்ட அவா், கடந்த முறை நீட் தோ்வு எழுதினாா். அதில், அவருக்கு போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கான தனி ஒதுக்கீட்டிலும், பொதுப் பிரிவிலும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத புனிதா, மீண்டும் அதே பயிற்சி மையத்தில் நீட் பயிற்சிக்காக சோ்ந்தாா்.

இந்நிலையில், அண்மையில் நடந்த அரசு பாரா மெடிக்கல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தாா். அதிலும் இடம் கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட புனிதா, செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த எடப்பாடி போலீஸாா் புனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.