கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பேருந்துகள்

புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2024, 8:10 pm

Din

சேலம்: புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வரும் 16, 17 ஆகிய தேதிகளில் சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், பெங்களூரு பகுதிகளில் இருந்து பக்தா்களின் வசதிகேற்ப 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதுதவிர, சேலம், தருமபுரி, ஒசூா் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 16 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து, பாதுகாப்பாக பயணம் செய்யும்படி அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.