கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

பொங்கல்: இன்றுமுதல் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:55 pm

Syndication

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி. குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார இறுதி நாள்கள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 19 ஆம் தேதி வரை 750 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.