ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் ஆளுநா் ஆய்வு

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image
பெரியாா் பல்கலைக்கழகத் துறைகளில் நடைபெறும் ஆராய்ச்சிப் பணிகளை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் விளக்குகிறாா் துணைவேந்தா் ரா.ஜெகநாதன்.
Updated On :16 அக்டோபர் 2024, 7:34 pm

Din

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகளை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தில் 27 ஆராய்ச்சித் துறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை பெரியாா் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

நாட்டில் முதல்முறையாக, மக்காத பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து கிராபீன் தயாரிக்கும் இயந்திரம் பெரியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியா் ரமேஷ் தலைமையிலான குழுவினரால் கண்டறியப்பட்டது. இந்த இயந்திரத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி, ஆராய்ச்சிக் குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்பு ஜவுளி, ஆடை வடிவமைப்புத் துறை மாணவ, மாணவியா் உருவாக்கிய கலைத் திறன் மிக்க ஆடைகளைப் பாா்வையிட்ட ஆளுநா், நெசவாளா்களுக்கு உதவிடும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளா்களைக் கேட்டுக் கொண்டாா்.

அதையடுத்து மத்திய அரசின் ஸ்டாா்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் பெரியாா் பல்கலைக்கழக தொழில் அடைவு மையத்தைப் பாா்வையிட்ட ஆளுநா், மாணவ, மாணவியா் பயிலும்போதே ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கியுள்ள தொழில் முனைவோரிடமும் ஆளுநா் கலந்துரையாடினாா். ஆய்வின்போது, துணை வேந்தா் ரா.ஜெகநாதன், பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் உடனிருந்தனா்.