உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

News image
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா்.
Updated On :24 அக்டோபர் 2024, 7:48 pm

Din

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில், பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போல பூத்தாலக்குட்டை, பூத்தாழிஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைவரருக்கும், அரசிராமணியில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

ஆத்தூரில்...

 ஆறகளூா் ஸ்ரீகாமநாதேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா்.

ஆறகளூா் ஸ்ரீகாமநாதேஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவா்.

தலைவாசல் வட்டம், ஆறகளூா் ஸ்ரீ காமநாதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.