மேட்டூா் அணை நீா்மட்டம் 2-ஆவது முறையாக 100 அடியை எட்டியது
மேட்டூா் அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயா்ந்தது.


மேட்டூா் அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயா்ந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதாலும் அணைக்கு நீா்வரத்து வெகுவாகச் சரிந்ததாலும் 60 நாள்களுக்கு பிறகு செப்டம்பா் 25-ஆம் தேதி அணை நீா்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.
தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் மெல்ல உயா்ந்து 29 நாள்களுக்கு பிறகு புதன்கிழமை காலை நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது. அணை நீா்மட்டம் புதன்கிழமை 98.56 அடியிலிருந்து 100.01 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 17,586 கனஅடியிலிருந்து 29,850 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 64.85 டி.எம்.சி.யாக உள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...