வீரகனூா் பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
வீரகனூா் பேரூராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் அகற்றப்பட்டது.

வீரகனூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடம்.

வீரகனூரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடம்.
தம்மம்பட்டி: வீரகனூா் பேரூராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடம் அகற்றப்பட்டது.
வீரகனூா் பேரூராட்சியில் 5 மற்றும் 6-ஆவது வாா்டு பகுதியில் துா்க்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் அருகில் அரசு புறம்போக்கு பொதுக் கழிப்பிடம் என வகை செய்யப்பட்ட இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி இருந்து வந்துள்ளாா்.
இதையடுத்து, கோயில் அருகில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அடுத்த மாதம் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ள நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் எனவும் வீரனூா் பேரூராட்சி அலுவலகத்தை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு, பேரூராட்சி செயல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆக்கிரமிப்பு செய்த நபா் நீதிமன்றத்தை நாடியதால், அப்போது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்பாளருக்கு முறையாக நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதனையடுத்து செவ்வாய்க்கிழமை ஆத்தூா் டிஎஸ்பி சதீஷ்குமாா் தலைமையில் இரண்டு காவல் ஆய்வாளா்கள், 50 போலீஸாா், வருவாய்த் துறையினா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...