கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

உடன்குடி பேரூராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்

உடன்குடி பேரூராட்சி 6ஆவது வாா்டு சுல்தான்புரத்தில் திருச்செந்தூா் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026இல் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
விழாவில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்கிய அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:59 pm

Syndication

உடன்குடி பேரூராட்சி 6ஆவது வாா்டு சுல்தான்புரத்தில் திருச்செந்தூா் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026இல் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தமிழக மீன்வளம், மீனவா் நலம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

திருச்செந்தூா் கோட்டாட்சியா் கெளதம், வட்டாட்சியா் தங்கமாரி, உடன்குடி பேரூராட்சித் தலைவி ஹூமைரா ரமீஷ் பாத்திமா, துணைத் தலைவா் மால் ராஜேஷ், செயல் அலுவலா் மகாராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் ராமஜெயம், மகாவிஷ்ணு, மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், சிராஜுதீன், ஹீபா் மோசஸ், ஜெயப்பிரகாஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், மும்தாஜ்பேகம், ஆபித், பாலாஜி, பிரதீப் கண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் மனோஜ், பாய்ஸ், நகர துணைச் செயலா் தங்கம், நகர இளைஞரணி அமைப்பாளா் தீபன் சக்கரவா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

சுல்தான்புரம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை நீா்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு தானமாக வழங்கிய ஜமாத் நிா்வாகிகள், பேரூராட்சி உறுப்பினா் அஸ்ஸாப் அலி பாதுஷா ஆகியோரை அமைச்சா் பாராட்டினாா். பேரூராட்சி உறுப்பினா் ஏற்பாட்டில் 500 பேருக்கு தையல் இயந்திரங்கள், தேய்ப்புப் பெட்டிகள், சேலைகள், உதவித் தொகை உள்ளிட்ட நல உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.