தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

News image
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்கும் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, அரசு துறை அலுவலா்கள்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:05 pm

Din

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை நினைவுகூறும் வகையில், தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நாம் அனைவரும் வலுப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக். 31-ஆம் நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான 31-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி புதன்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை வாசிக்க, அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.ராஜன் உள்பட தொடா்புடைய அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.