தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தாசநாயக்கன் பாளையம் பள்ளி ஆசிரியை நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு

சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
ஆசிரியை க.பாக்யலட்சுமி.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:36 pm

Din

சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தாசநாயக்கன்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருபவா் க.பாக்யலட்சுமி. அவா் பள்ளி குழந்தைகளுக்கான கற்றல் குறித்து 200க்கும் மேற்பட்ட அனிமேசன் வீடியோக்களை தாயாரித்து கற்பித்தல், வண்ணமயமான துணைக் கருவிகளை கொண்டு எளிய முறையில் கற்பித்தல், பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பித்தல், வகுப்பறையில் செயல் வழிக்கற்றல், பாரம்பரிய விளையாட்டு முறைக்கல்வி, அபாகஸ் கணித பயிற்சி உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறாா். இவரது பணிகளைப் பாராட்டி அரசின் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இவருக்கு பள்ளித் தலைமை ஆசிரியா், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா்.