பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின்னாம்பள்ளி சாலை ரூ. 2.87 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம்

சேலம் மின்னாம்பள்ளி சாலை ரூ. 2.87 கோடியில் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
மின்னாம்பள்ளி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு, நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை குழுவினா்.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:43 pm

Din

சேலம் மின்னாம்பள்ளி சாலை ரூ. 2.87 கோடியில் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் - ஆத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் மின்னாம்பள்ளியில் இருந்து செல்லியம்பாளையம் செல்லும் சாலை ஒரு வழித்தடமாக உள்ளது. இச்சாலையில் இரு வாகனங்கள் எதிரெதிரே வரும்போது ஒதுங்குவதற்கு கூட வழியில்லை. பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரங்களில் குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இச்சாலையை அகலப்படுத்துமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து, வாழப்பாடி நெடுஞ்சாலைத் துறையினா், இச்சாலையை அகலப்படுத்த ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெற்று, சாலை விரிவாக்கப் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனா்.

 மின்னாம்பள்ளி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு, நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை குழுவினா்.

மின்னாம்பள்ளி சாலை விரிவாக்கப் பணிகளுக்கு, நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை குழுவினா்.

தற்போது, சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களைக் கணக்கெடுத்தல் மற்றும் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நில அளவையரைக் கொண்டு சாலையின் எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் செய்து வருகின்றனா்.

விரைவில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினா் தெரிவித்துள்ளதால், செல்லியம்பாளையம் மின்னாம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.