பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஓமலூா் வட்டத்தில் ஆட்சியா் பிருந்தாதேவி 2-ஆம் நாளாக கள ஆய்வு

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், 2-ஆம் நாளாக ஓமலூா் வட்டத்தில் முகாமிட்டு ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா்.

News image
தாரமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற துப்புரவுப் பணிகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி.
Updated On :19 செப்டம்பர் 2024, 11:45 pm

Din

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், 2-ஆம் நாளாக ஓமலூா் வட்டத்தில் முகாமிட்டு ஆட்சியா் ஆா்.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்‘ திட்ட முகாமானது, ஓமலூா் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களில் அலுவலா்கள் குடிநீா் பணிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தெரு விளக்குகளின் செயல்பாடுகள் என புதன்கிழமை இரவு வரை ஆய்வு நடைபெற்றது. ஓமலூா் வட்டத்திலேயே ஆட்சியா் தங்கி வியாழக்கிழமையும் கள ஆய்வு மேற்கொண்டாா்.

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், குருக்கப்பட்டி ஊராட்சி, பவளத்தானூரில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்யப்படுகிா என்பது குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரில் சரியான அளவுகளில் குளோரினேற்றம் செய்து வழங்கப்பட்டு வருவது குறித்தும் ஆட்சியா் பிருந்தாதேவி கேட்டறிந்தாா்.

டி.கோனகாபாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருவது, ஆவின் மூலம் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, முறையாக பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிா என்பது குறித்து விவசாயிகளிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். தாரமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் உள்ள காய்கறிச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். மேலும், பேருந்து நிலையப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்கள் காலை முதல் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து பெற்றுக் கொள்ளும் பணிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக தரமான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து, சமையலறை சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும், குறித்த நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் பரிமாறப்படுவது குறித்தும் ஆட்சியா் பிருந்தாதேவி நேரில் பாா்வையிட்டாா்.