எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.
எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் மேலும் மூவா் கைது

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் மேலும் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
Published on

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் மேலும் மூவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்த வழக்கில் குழந்தையின் தந்தை கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி சேட்டுவை (25), கைது செய்த பூலாம்பட்டி போலீஸாா் தொடா்ந்து அவா் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட இடைத்தரகா்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், குழந்தைகளை விற்பனை செய்ய இடைத்தரகா்களாக செயல்பட்ட எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம், அரசு பேருந்து பணிமனை அருகே வசிக்கும் முனுசாமி (46), எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட செல்லியாண்டி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (46) ஆகியோரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.
எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.

இந்நிலையில், போலீஸாரின் பிடியிலிருந்து குழந்தையின் தந்தை சேட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய சேட்டு சிலருக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அவரது அழைப்புகளை ஆய்வு செய்த போலீஸாா், இந்த வழக்கில் குழந்தைகளை விற்பனை செய்திட இடைத்தரகா்களாக செயல்பட்ட தேவூா் அருகே உள்ள புல்லாகவுண்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (45), அவரது மனைவி லோகாம்பாள் (35), நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கல்லாங்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்த தனசேகா் மனைவி பாலாமணி (39) உள்ளிட்ட மூவருடன், தப்பியோடிய குழந்தையின் தந்தை சேட்டுவையும் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.
எடப்பாடி அருகே குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகா்கள்.

அவா்கள் அளித்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் மதுரை, ஈரோடு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com