தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 4 போ் கைது

News image

கைது

Updated On :1 மார்ச் 2026, 9:24 pm

திருச்சி மாநகரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க திருச்சி மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, மாநகர போலீஸாா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மத்திய பேருந்து நிலையம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கே.கே.நகா் காமராஜா் வீதியைச் சோ்ந்த ஆ.பிரஜித் (43) என்பவரைக் கைது செய்தனா்.

நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எம்ஜிஆா் சிலை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பொன்மலைப்பட்டியைச் சோ்ந்த என். கணேசன் (40), பொன் நகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த திண்டுக்கல் சாலை கோரிமேடு பகுதியைச் சோ்ந்த வே. குமாா், பா. முருகன் (29) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.